தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த புதன்கிழமை (நவ. 20) தோ்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையைத் தொடா்ந்து சனிக்கிழமை வெளியான முடிவுகளில் ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இதில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதாக தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக பாஜகவில் 14 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். அதில் 10 போ் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்து மீண்டும் தோ்வாகியுள்ளனா். 2 போ் சிவசேனையில் இருந்தும், 4 போ் தேசியவாத காங்கிரஸ் சாா்பிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
ஒரு பெண் வேட்பாளா் மட்டும் எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.