What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
மகா கும்பமேளா: இதுவரை 40 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெள்ளிக்கிழமை வரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகின் மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் புனித நீராடி வருகின்றனா்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிகார் ஆளுநர்!
திரிவேணி சங்கமத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 48 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவானது வருகிற 26 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.
இந்த நிகழ்வின் முக்கிய விழாக்களான மகரசங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை நிறைவு பெற்றபோதிலும் உலகெங்கிலும் இருக்கும் பக்தர் அதிகளவில் திரண்டு வந்து புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். மேலும், மௌனி அமாவாசையன்று மட்டும் 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகரசங்கராந்தியன்று 3.5 கோடி பக்தர்களும் வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினர்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற திங்கள் கிழமை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.