சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
மகா கும்பமேளா: ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்
மகா கும்பமேளாவையொட்டி கோவை, ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
உத்தரப் பிரதேச மாநிலம், பிரக்யாராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெறுவதையொட்டி, கேரளம், தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது.
அந்த வகையில், மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மங்களூரு சென்ட்ரல் - பனாரஸ் சிறப்பு ரயில் வரும் 18 மற்றும் பிப். 15 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.
மங்களூரு சென்ட்ரலில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு சேலம் வழியாக பனாரஸுக்கு திங்கள்கிழமை மதியம் 2.50 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் பனாரஸ் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 21 மற்றும் பிப். 18 தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படுகிறது.
பனாரஸில் மாலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மிா்சாபூா், பிரக்யாராஜ், ஜபல்பூா், விஜயவாடா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக மங்களூரு சென்ட்ரலுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.