I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
மகா கும்பமேளா: முதல்வர் யோகி தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்!
மகா கும்பமேளாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஜன. 22) நடைபெற்று வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி ஜன. 13 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், மகா கும்பமேளாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஜன. 22) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும், யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இன்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபட உள்ளனர்.