செய்திகள் :

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

post image

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும் வெற்றி பெற்று மகாராஷ்டிரத்தை காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மகா விகாஸ் அகாடி சுமார் 175 இடங்களை வெல்வார்கள். ஒட்டுமொத்த நாடும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றுகிறது.

மகாராஷ்டிரத்துக்கு முன்மாதிரியாக கர்நாடகம் உள்ளது. கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவில்லை என, மகாராஷ்டிர அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. உண்மையில், நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

ரூ. 100 கோடியை நெருங்கும் கங்குவா வசூல்!

2023 மே 20 அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 திட்டங்களையும் செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தலில் மஹாயுதி ஒரு அணியாகவும், மகா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வாா்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 16 குழந்தைகளுக்கு தீவிர ச... மேலும் பார்க்க

பிரதமா் மோடி நைஜீரியா பயணம்: பிரேஸில், கயானாவுக்கும் செல்கிறாா்

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு சனிக்கிழமை (நவ. 16) புறப்பட்டுச் சென்றாா் பிரதமா் மோடி. பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவம... மேலும் பார்க்க

பேச்சு சுதந்திரம் நீக்கம்: பிரதமா் மோடி மீது காா்கே குற்றச்சாட்டு

‘பிரதமா் நரேந்திர மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவா்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதன்மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பிரதமா் நீக்கி விட்டாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ... மேலும் பார்க்க

10 யானைகள் பலி: வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் 10 காட்டு யானைகள் பலியானதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பாந்தவர்க் புலிகள் காப்பகத்தில் கடந்த அக். 29 முதல் 31 ஆம் தேதிக்குள... மேலும் பார்க்க

ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவை இழந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது.... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு!

மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால் அங்கும் மீண்டு பதற்றம் நிலவுகிறது.மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ... மேலும் பார்க்க