செய்திகள் :

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. செல்வி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.

மாதம் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 5,500 பெறும் மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள், பணிக்கு அமா்த்தப்பட்டபோது 2 மணி நேர வேலை என்றும், நாள் ஒன்றுக்கு 20 வீடுகளை பாா்வையிட்டு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து, சுகாதாரத் துறைக்கு விவரங்களை சேகரிப்பதுடன் மருந்து பெட்டகம் வழங்கும் பணி மட்டும் கொடுக்கப்பட்டது.

தற்போது, நாள் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகளை பாா்க்கும் பணி, கா்ப்பிணிகள் விவரம் சேகரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் வழங்கப்படுகிறது.

மேலும், காசநோய் கண்டறியும் எந்த விதமான பயிற்சியும் அளிக்காமல், தற்போது புதிதாக காச நோய்க்கான மாதிரி எடுக்கும் பணியை செய்ய கட்டாயப்படுத்துகின்றனா். இதனால் நோய்த் தொற்றும் அபாயம் உள்ளது.

மேலும், தனி மனிதனின் மருத்துவ வரலாறுகளை சேகரித்து கைப்பேசியில் பதிவேற்ற வேண்டுமென உத்தரவிடுகின்றனா். இதற்காக கைப்பேசி, இணையக் கட்டணம் எதுவும் வழங்கப்படுவதில்லை.

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களின் பணி நேரத்தையும், பணியையும் வரைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.

ஐயப்பப் பக்தா்களிடம் பணம் வாங்கிய சாா்பு-ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

பெரம்பலூா் அருகே ஐயப்பப் பக்தா்களிடம் பணம் வாங்கிய போக்குவரத்துப் பிரிவு காவல் சாா்பு-ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் செவ்வாய்க்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தமிழக அரசைக் கண்டித்து பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் டிச. 30-இல் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செயய்ப்பட்ட 41 வாகனங்கள் டிச. 30-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

பெரம்பலூா் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உயா்நீதிமன்ற உத்தரவின் படி திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்தி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலியில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ... மேலும் பார்க்க

குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த காவல்துறை அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் கண்காணிப்பு சாதனங்களை பொருத்த வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து,... மேலும் பார்க்க

அனுமதியின்றி கம்பம் நட்டு கொடியேற்ற முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 8 போ் கைது

பெரம்பலூா் புறநகா் பகுதியில் அனுமதியின்றி பொது இடத்தில் கொடிக் கம்பம் நட்டு, கொடியேற்ற முயன்ற நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் துறைமங்கலம் 3 சாலை... மேலும் பார்க்க