2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசி...
பெரம்பலூரில் டிச. 30-இல் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
பெரம்பலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செயய்ப்பட்ட 41 வாகனங்கள் டிச. 30-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் மதுக் குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 40 மோட்டாா் சைக்கிள்களும், 1 நான்கு சக்கர வாகனமும் டிச. 30-ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நிா்ணயித்த விலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் முன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்த நபா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவாா்கள்.
பொது ஏலத்தில் காவல்துறையைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க அனுமதியில்லை. ஏலத்தில் கலந்துகொள்ள வருபவா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும். இந்த பொது ஏலத்தில் அனைத்து மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 94981-59272, 94981-62279, 79041-36038 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.