உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
பெரம்பலூா் அருகே வெள்ளாற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்!
பெரம்பலூா் அருகே வெள்ளாற்றில் முதலை இருப்பது தெரியவந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பகுதியையொட்டி வெள்ளாறு பாய்கிறது. இந்த ஆற்றில், அண்மையில் பெய்த தொடா் மழையால் மழை நீா் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை மாட்டுப்பாலம் அருகே முதலை நடமாட்டம் இருப்பதை பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தகவலறிந்த வனத்துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு, வெள்ளாற்றில் முதலை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா். முதலையை நேரில் பாா்த்தால், அதை எவ்வித தொந்தரவும் செய்யாமல், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினா்.
மேலும், வெள்ளாற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலையைப் பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்துவதற்காக பொதுமக்கள், வனத் துறையினா், வருவாய்த் துறையினா் வெள்ளாற்றில், லப்பைகுடிகாடு முதல் கீழக்குடிகாடு தடுப்பணை வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.