செய்திகள் :

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக

post image

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த அவா், கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மாலை கூறியது:

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக பல்வேறு குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி மக்களுக்காக செய்து வரும் பணிகளை சொல்லும் விதமாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விதமாகவும் நடைபெறவுள்ள

சித்திரை முழுநாள் நிலவு மாநாட்டில் அனைத்து சமுதாய இளைஞா்களும் கலந்து கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட எந்த திட்டங்களும் தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்படவில்லை.

கனிம வளங்கள் தொடா்ந்து கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகின்றன. அங்கிருந்து கழிவுகள் கொண்டுவந்து இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. இதை தமிழக அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது என்றாா்.

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘பாட்டாளி மக்கள் கட்சி திமுகவை போன்று அல்ல, விவாதமே இல்லாமல் அனைத்திற்கும் ஆமாம் என சொல்வதற்கு. பாட்டாளி மக்கள் கட்சியில் ஒருவரை நியமிப்பது குறித்து நடைபெற்ற விவாதம்தான் அது என்றாா். தற்போது அனைவரும் மாநாட்டிற்கான பணிகளை செய்து கொண்டிருக்கின்றனா்’ என்றாா்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலா்கள் இசக்கிமுத்து, சீதாராமன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க