மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு
புது தில்லி: உத்தரப் பிரதேசம், பிகாரில் மக்கள்தொகை அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தான், தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய நாயுடு,
உலகில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் வயது முதிர்ந்த மக்கள்தொகையுடன் போராடி வரும் நிலையில், மக்கள்தொகை பலன்களை நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு சொத்தாக அங்கீகரித்து, இப்போது தென் மாநிலங்களும் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புவதாகவும், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நான், தற்போது எனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மக்கள்தொகை அதிகமாக இருப்பது நல்லதுதான்.
பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மக்கள் தொகை ஒரு பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அது வரவேற்கத்தக்க அறிகுறியாக தான் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் முக்கியம் தான். ஆனால் நமக்குத் தேவையானது மக்கள்தொகை மேலாண்மை தான்.
மக்கள்தொகை பலன்களில் மிகப்பெரிய நன்மையை பெறும் ஒரு நாடு இந்தியா. மக்கள்தொகை மேலாண்மை மூலம் மக்கள்தொகை பலன்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய நாயுடு, எதிர்காலத்திற்கான மக்கள்தொகைப் பலன்களை நாம் நிர்வகிப்பதன் மூலம் "இந்தியாவும் இந்தியர்களும் சிறந்தவர்களாக இருப்பார்கள்" என்றார்.
உலகளாவிய சமூகங்கள் தங்களுக்கான சேவைகளுக்காக இந்தியர்களான நம்மையைச் சார்ந்துள்ளன. இது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல. தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று நாயுடு வலியுறுத்தினார்.
மேலும் மக்களவைத் தொகுதி சீரமைப்பு தொடர்பாகவோ, அதனை எப்படி கணக்கிடுவது என்பது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அனுமானங்கள் குறித்து கருத்து செல்ல முடியாது என்றார்.
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி
இந்தி கற்றுக்கொள்வது நல்லது
மும்மொழிக் கொள்கை குறித்து நாயுடு கூறுகையில், "இப்போதெல்லாம், உலகளாவிய வாய்ப்புகளுக்காக அனைவரும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பல மொழி மையங்களை நிறுவுவது குறித்து ஊக்குவிக்கப் போகிறேன்" என தெரிவித்தார்.
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்
சமீபத்தில் நாகப்பட்டினத்தில் கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026-க்குப் பிறகு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்படும் என்பதால், குடும்பக் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் வெற்றி இப்போது அதற்கு எதிராக செயல்படக்கூடும் என்று கிண்டலாக பேசியவர், சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று மணமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்போது அந்த அறிவுரையைக் கூற முடியாது. ஏன் என்றால் அதிக மக்கள்தொகை இருந்தால் மட்டுமே அதிக எம்.பி.க்களை பெற முடியும் என்று தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது. ஆனால், அதுவே தமிழகத்துக்கு தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.
எனவே, அவரசமாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறமாட்டேன். ஆனால், விரைவாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.