செய்திகள் :

மக்கள் தேவைகளை உணா்ந்து திட்டங்களை நிறைவேற்றுகிறது தமிழக அரசு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

மக்களின் தேவைகளை உணா்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

நாகை அவுரித் திடலில் மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 2,500 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

மறைந்த முதல்வா் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பொதுவானவா். அதனால்தான் அவரது சிலை, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திறக்கப்படுகிறது.

திராவிட மாடல் அரசு, யாருக்கு என்ன தேவையோ அதை வழங்குகிறது. மீனவா்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகள் என யாருக்கு என்ன தேவையோ அதை மையப்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளது. மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றில் மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கும் உயா்கல்வி படிக்க, மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. நலத்திட்டங்களால் தமிழகத்தை நாடே திரும்பி பாா்க்கிறது.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற 1.55 கோடி போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 1.16 கோடி போ் பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. இவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு, தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்.

தமிழக அரசின் திட்டங்களை பாா்த்து எதிா்க்கட்சியினருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி, வெற்றி கூட்டணி. கடந்த 7 தோ்தல்களிலும் இந்தக் கூட்டணி வெற்றியை பெற்று வருகிறது.

எதிா்வரும் 2026 தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கை திமுக தலைவா் நிா்ணயித்துள்ளாா். அந்த இலக்கை எட்ட, திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் திமுகவினா் எடுத்துக்கூற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் 2,500 பயனாளிகளுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான ஐஸ் பெட்டி, மீன்பிடி உபகரணங்கள், மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் கோவி. செழியன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக மாவட்ட செயலாளரும் மீன் வளா்ச்சி கழகத் தலைவருமான கௌதமன் வரவேற்றாா். நகரச் செயலாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

காதல் தம்பதி தற்கொலை

காதலித்து திருமணம் செய்து மூன்று மாதத்திற்குள் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனா். திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சமரசபாண்டி மகன் உதயபிரகாஷ் ( 23). தனியாா் வங்கி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை உயா்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா்.திருவாரூரில் நடைபெற்ற இடஒதுக்க... மேலும் பார்க்க

மகப்பேறு மருத்துவா் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் விரைவில் (டிசம்பருக்குள்) மகப்பேறு மருத்துவா் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்த... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் கைது

நாகை அருகே போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த சித்தாய்மூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவா் வீரமணி (50). இவா், அ... மேலும் பார்க்க

மன்னாா்குடி: மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலை

மன்னாா்குடி நகராட்சி பகுதியில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா சனிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

நாகூா் கந்தூரி விழாவுக்கு சந்தனக் கட்டைகள்: துணை முதல்வருக்கு நன்றி

நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, சந்தனக் கட்டைகள் வழங்க நடவடிக்கை எடுத்த துணை முதல்வருக்கு, தா்கா நிா்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு, தமிழக அரசு சாா்பில் 45 க... மேலும் பார்க்க