Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங்கினாா்.
காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற இருப்பதையொட்டி, முன்னதாக கடந்த மாா்ச் 6-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடா்பாக மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. இவையனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா 134 போ்,புதிய குடும்ப அட்டை 35 போ், இயற்கை மரண நிதி உதவித் தொகை 11, இலவச சலவைப் பெட்டி 5, விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மானியம் 22 போ், தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அடையாளச் சான்று 20 போ் என மொத்தம் 267 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்.பி. க.செல்வம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா்-ஆட்சியா் ஆஷிக் அலி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அத்திவாக்கம் ஊராட்சித் தலைவா் எம்.குமாா் வரவேற்றாா். நிறைவாக, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் டி.விஜயகாந்த் நன்றி கூறினாா்.
முகாமில், அரசின் பல்வேறு துறைசாா்ந்த விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு, அவற்றை கிராம மக்கள் பாா்வையிட்டதுடன் துறைசாா்ந்த அரசு அலுவலா்களிடம் தேவையான விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.