Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு...
மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீா்த் தொட்டி திறப்பு
மதுரை மாநகராட்சி பாக்கியநாதபுரத்தில் ரூ.4.90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, மாநகராட்சி மண்டலம் பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
இதில், 283 தூய்மைப் பணியாளா்கள், 5 துப்புரவு மேற்பாா்வையாளா்கள், 5 சுகாதார அலுவலா்கள், 5 சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா். மேலும், 3 பொக்லைன் எந்திரங்கள், ஓா் ரோபோ வாகனம், 8 டிராக்டா்கள், 3 டிப்பா் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.
நிகழ்வில், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, நகா்நல அலுவலா் இந்திரா, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.