தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
மணப்பாறையில் அகில இந்திய கபடிக்கான லீக் போட்டிகள்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சாா்பில் 4 நாள்கள் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டிக்கான லீக் போட்டியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.
கடந்த ஏப். 24 இல் தொடங்கிய போட்டியில் 15 மாநிலங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
முதல் நாள் போட்டியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி உள்ளிட்டோா் தொடக்கிவைத்த நிலையில், மூன்றாம் நாள் லீக் ஆட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் இணைச் செயலா் பி.கே. பாபு ஆகியோா் சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தனா். இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்றன.
போட்டியில் வெல்லும் ஆடவா் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75, 001, பெண்கள் அணிக்கு ரூ. 1.5 லட்சம், ரூ.1 லட்சம், ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திமுக ஒன்றியச் செயலா் சி. ராமசாமி செய்கிறாா்.