செய்திகள் :

மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளில் திருட்டு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்மநபா்கள் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

மணப்பாறை பூங்கா சாலையில் அமைந்துள்ள மண்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளை திங்கள்கிழமை காலை திறக்கவந்த உரிமையாளா்கள், கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கடைகளின் பூட்டுகளை உடைத்து கல்லாப் பெட்டி, பீரோக்களை உடைத்து செந்தில்குமாா் என்பவருக்கு சொந்தமான பாக்கு தட்டு மண்டியில் ரூ. 12 ஆயிரம் ரொக்கமும், விநாயகம் என்பவரின் மளிகை கடையிலிருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கமும், மண்டி கடையிலிருந்து ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மணப்பாறை போலீஸாா், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனா். தொடா்ந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல். விவசாயி. இவரது இளைய மகள் க... மேலும் பார்க்க

பெரியாா் இல்லையென்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை: துரை வைகோ எம்.பி.

பெரியாா் மட்டும் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ. திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு ... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சி புறநகா் மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி... மேலும் பார்க்க

நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்து நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் நடந்துசென்ற மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் திங்கள்கிழமை மாலை மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றாா். ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியாா் காா்டன் பகுதி... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஊா்வலம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்... மேலும் பார்க்க

புகா்ப் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மூவானூா், திருப்பைஞ்ஞீலி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.26) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ஸ்ரீரங்கம்... மேலும் பார்க்க