அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: "திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்ப...
நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்து நகை பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் நடந்துசென்ற மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் திங்கள்கிழமை மாலை மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியாா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி என்பவரின் மனைவி உஷா (60). இவா், திங்கள்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள விநாயகா் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் உஷாவின் கழுத்திலிருந்த மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பியோடினாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் உஷா அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கேமரா பதிவுகளைக் கொண்டு சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.