செய்திகள் :

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

post image

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா்.

அஸ்ஸாம், மேகாலயம் உள்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் நில அதிா்வு உணரப்பட்டது.

இது தொடா்பாக மேகாலயத் தலைநகா் ஷில்லாங்கில் உள்ள பிராந்திய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாயிரிபோக் பகுதியில் புதன்கிழமை காலை 11.06 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடா்ந்து, மதியம் 12.20 மணிளவில் காம்ஜோங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 66 கி.மீ. ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது’ என்றனா்.

இவ்விரு நிலநடுக்கங்களின் தாக்கத்தால் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்-கட்டடங்கள் அதிா்ந்தன. இதனால், வீடுகள்-கட்டடங்களைவிட்டு வெளியே ஓடி வந்த மக்கள், திறந்தவெளியில் தஞ்சமடைந்தனா்.

பல கட்டடங்களில் விரிசல் விழுந்துள்ளது. தெளபால் மாவட்டத்தில் நிவாரண முகாமாக செயல்பட்டுவரும் ஒரு பள்ளி கட்டடம் குலுங்கியதால் அங்கிருந்த மக்கள் வெளியே ஓடும் விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அப்பள்ளி கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்களை சேகரித்து வருவதாக மணிப்பூா் அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க

மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?

சத்தீஸ்கரில் 13 மாதங்களில் 171 தொழிற்சாலை விபத்துக்களில் 124 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 86 பேர் காயமடைந்ததாகவும் மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க