பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் வெவ்வேறு நடவடிக்கைகளில் கைது
மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட குழுவின் இரண்டு செயல் உறுப்பினர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாங்கோலில் இருந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் சாய்ரேம் ரிஷிகுமார் சிங் (24) மற்றும் லாங்ஜம் நங்கந்தொய்பா மெய்தி (22) என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் இம்பால் மற்றும் தௌபால் ஆகிய இடங்களில் மிரட்டி பணம் பறித்ததில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து 6 கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அஸ்வின், அஜித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மேலும் தடைசெய்யப்பட்ட மற்றொரு குழுவின் இரண்டு பேர் சர்ச்சந்த்பூர் மாவட்டத்தின் நியூ டேம்பியில் உள்ள மௌன்சங் கிராமத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்கள் தங்க்ரெங்சாங் கோம் (45) மற்றும் எல் வாஷிங்டன் கோம் (42) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் முன்னாள் ராணுவத்தினரை மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.