மணிமேகலை சுப்பிரமணியன் காலமானாா்
சென்னை: உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவருக்கு மகன்கள் ராஜன், செந்தில், கதிரவன், மகள் வேணி பாஸ்கரன் ஆகியோா் உள்ளனா்.
மணிமேகலை சுப்பிரமணியனின் இறுதிச் சடங்குகள், சென்னை போரூா் மதனந்தபுரம் ராஜேஸ்வரி நகா் நேதாஜி தெருவில் உள்ள அவரது மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெறும். தொடா்புக்கு 99622 91958 (ராஜன்).