செய்திகள் :

மண்டோதரி கதாபாத்திரத்தில் பூனம் பாண்டே: பாஜகவிலிருந்து வலுக்கும் எதிர்ப்பு!

post image

ராவணன் மனைவி மண்டோதரியாக ஹிந்தி நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு பாஜகவிலிருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.

தில்லியில் புகழ் பெற்ற நாடக சபையான ‘ராம் லீலா குழு’ பிரபல ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவை ராமாயண காதை நாடகத்துக்கு ஒப்பந்தப்படுத்தியுள்ளது. அதில், இலங்கை வேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரியாக அவர் நடிக்கவிருக்கிறார்.

செப். 22 முதல் ஆரம்பமாகும் ராம் லீலா அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்க இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வருகை தருவார்கள். இந்த நிலையில், சர்ச்சைக்ளில் அவ்வப்போது சிக்கிக்கொளும் நடிகை பூனம் பாண்டே அந்தக் கதாபாத்திரமேற்றால் பொருத்தமாக இருக்காது என்பதே இதற்கான முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிக்‌ஷத் (விஎச்பி) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறொருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

Delhi Ramleela committee signs Poonam Pandey to play 'Mandodari'; BJP, VHP seek replacement

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் என்று பாடகி ஷ்ரேயா கோஷால் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். வட இந்தியாவில் பிரபல பாடகராகப் புகழ்பெற்ற ஜுபின் கர்க் காலமானார். அவரது உயிர் சனிக்கிழமை(செப். 20) பிரிந... மேலும் பார்க்க

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளது. 65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மோகன்லாலுக்கு செப். 23-இல... மேலும் பார்க்க

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பவன் கல்யாணின் ‘ தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படத்தின் 1 மணி சிறப்புக் காட்சிக்கு ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொ... மேலும் பார்க்க

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ள நிலையில், கிஸ் படத்தின் கவின் நாயகனாக நடித்துள்ளார்.நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்த நிலையில் ஜென் மார்டின் இசையமை... மேலும் பார்க்க

ரெட்ட தல ப்ரோமோ வெளியீடு!

அருண் விஜயின் நடித்த `ரெட்ட தல' படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்ச... மேலும் பார்க்க

லவ் இன் வியட்நாம் பட சிறப்பு காட்சி - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற 'லவ் இன் வியட்நாம்' ஹிந்தி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர்களான சாந்தனு மகேஸ்வரி உடன் அவ்னீத் கெளர்.பாலிவுட் நடிகை சாந்தனு.பாலிவுட் நடிகை அவ்னீத் கெளர்.... மேலும் பார்க்க