மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரவில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்தவரும் ஜேசிபி வைத்து பராமரித்து வருபவருமான சந்திரசேகரன் மகன் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முற்றியதில், மண்வெட்டியால் தாக்கப்பட்ட குமார் பலியானார்.
குமாரின் சடலத்தை கைப்பற்றிய வேதாரண்யம் போலீஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இன்றைய தங்கம் விலை நிலவரம்!