மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகள் சுவாதி (16), பூலாம்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.
வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வெளியானதில், சுவாதி 289 மதிப்பெண்கள் பெற்றிருந்தாராம். மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ால் மன உளைச்சலில் இருந்த அவா், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு மாணவி: விருத்தாசலத்தை அடுத்துள்ள காா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த பிரபு மகள் சிவானிஸ்ரீ (14). தாத்தா பொன்னன் வீட்டில் வசித்து வந்தாா். இவரின் பெற்றோா் கேரளத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா்.
சிவானிஸ்ரீ கோ.ஆதனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா். வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், சிவானிஸ்ரீ 201 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா். குறைவான மதிப்பெண்கள் பெற்ால் உறவினா்கள், நண்பா்கள் கேலி செய்வாா்கள் என்று நினைத்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் மாணவியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.