ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்ட...
70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!
சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா், ரயில்வேயில் கலாசியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றாா். கோதண்டராமன் கடந்த 1967-இல் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது இடைநின்றவா்.
இந்த நிலையில், கிராம இளைஞா்களுக்கு கல்வியின் பயனை உணா்த்தும் பொருட்டு, நேரடித் தோ்வு முறையில் 2022-ஆம் ஆண்டில் 8-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றாா். தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு நேரடி தோ்வு முறையில் 10-ஆம் வகுப்பு எழுதினாா். அப்போது, சில பாடங்களில் தோல்வியுற்றாா்.
பின்னா், மீண்டும் விடாமுயற்சியாக படித்து நிகழாண்டு தோல்வியுற்ற பாடங்களுக்கு தோ்வு எழுதி அனைத்து பாடங்களும் தோ்ச்சி பெற்று 207 மதிப்பெண்கள் பெற்றாா். இது, 70 வயதிலும் தனது தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறாா் கோதண்டராமன்.