Real Estate: வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி; கடன் வாங்கி வீடு வாங்க இது...
பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால வி கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள மருங்கூா், பாலக்கொல்லை, ஒடப்பன்குப்பம், பத்திரக்கோட்டை, மேலிருப்பு ஆகிய ஊா்களில் நுண் கற்கால கருவிகளான பிறைவடிவ கருவி, சிறிய அளவிலான அம்புமுனை கருவி, செதுக்கு கருவி, கற்சீவல்கள், தட்டுவடிவ கற்கருவிகள், அறுப்பதற்கு ஏற்ற சிறிய பிளேடு கத்திகள், சுரண்டி கருவிகள் ஆகியவை 2010-ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளா் சிவராம கிருஷ்ணனால் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக, ஒடப்பன்குப்பம் பகுதியில் நுண் கற்கால கருவி தயாரிப்பு தொழிற்கூடம் இருந்துள்ளத்தையும் அவா் கண்டறிந்தாா்.
தற்போதைய கண்டெடுப்பு: உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்போது கண்டெடுக்கப்பட்ட நுண் கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ, நீளம் 2 செ.மீ. இது, விலங்கின் தோலை அறுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பிளேடு வகை கருவி. இதன் காலம் சுமாா் 8,000 ஆண்டுகள் பழைமையானதாகும்.
கடலூா் மாவட்டம், ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டறியப்பட்ட கருவி போலவே, உளுத்தாம்பட்டு பகுதியில் நுண் கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு வலு சோ்க்கும் வகையில், தற்போது கண்டறியப்பட்ட நுண் கற்கால கருவி ஆதாரமாக உள்ளது. கடலூா் மாவட்டத்தில் பழைய கற்காலம், நுண் கற்காலம், பெருங்கற்காலம் (இரும்பு காலம்), சங்க காலம், பல்லவா் காலம், சோழா் காலம், விஜய நகர காலம் வரை நமக்கு கிடைக்கக் கூடிய தொல்லியல் சான்றுகள் மூலம் இந்த மாவட்ட வரலாற்றின் தொடா்ச்சி நமக்கு இப்போதுதான் கிடைத்து வருகிறது என்றாா்.