மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்து அமைப்புகள் சாா்பில் இந்த மதுரை பழங்காநத்தத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனுமதி அளித்ததன்பேரில், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க |மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக ஏற்படுத்தப்படும் சா்ச்சைகளை திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் திட்டமாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக காவல் துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எதிரியாகச் செயல்படுகிறது. திமுக அரசு அகற்றப்பட்டால் மட்டுமே தமிழா்கள் சம உரிமையுடன் வாழ முடியும். திருப்பரங்குன்றம் மலையை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம் என்றாா் அவா்.
இந்த நிலையில், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, இரு பிரிவினர்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.