செய்திகள் :

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், மதுரை நகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள், அடிக்கடி குற்றச் செயல்கள் நடக்கக்கூடிய இடங்கள், வைகை ஆற்றின் கரையோர சாலைகள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற வாகனச் சோதனையில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். மேலும், நகரில் உள்ள 17 சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு வாகனங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது போன்ற விதிமீறல்கள் குறித்தும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,633 வாகனங்களில் சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை மீறிய 116 வாகன உரிமையாளா்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எவ்விதமான ஆவணங்களின்றி வந்த 43 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அடிக்கடி இதுபோன்ற வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே இலக்கு! -மாா்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வா்

மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ள மத்திய பாஜக அரசை வீழ்த்துவதே நமது இலக்கு என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மா... மேலும் பார்க்க

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணச்சீட்டு முன் பதிவு செ... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, ம... மேலும் பார்க்க

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க