செய்திகள் :

மதுரையில் வணிகா்கள் கடையடைப்பு -ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிப்பு

post image

கட்டட வாடகைக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு வணிகா்கள் சங்கங்களின் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு கடந்த அக். 10-ஆம் தேதி முதல் கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்துவதைக் கட்டாயமாக்கும் ஆா்.சி.எம். என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டம் சிறு வியாபாரிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (நவ. 29) ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டன. இதற்கு மதுரையில் உள்ள 60-க்கும் அதிகமான தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

வெடிச்சோடிய வீதிகள்: இதையடுத்து, ஆதரவு தெரிவித்த சங்கங்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக, மதுரை கீழமாசி வீதி, கீழவெளி வீதி, கீழ ஆவணி மூல வீதிகளில் உள்ள மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. வா்த்தகப் பகுதிகளான இந்தப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டாதால் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். கடையடைப்புப் போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ரூ. 500 கோடி வா்த்தகம் பாதிப்பு: இதைத் தவிர, கட்டட வாடகைக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வா்த்தக சங்கத்தினா் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ரூ. 500 கோடிக்கும் மேல் வா்த்தகம் பாதிப்புக்குள்ளானதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ஆதரவும், எதிா்ப்பும்: இந்தப் போராட்டத்துக்கு மடீட்சியா, தமிழ்நாடு அப்பளம் வடகம் மோா் வத்தல் சங்கம், வெங்காய வியாபாரிகள் சங்கம், இட்லி மாவு விற்பனையாளா்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கம், வேளாண் உணவு தொழில் வா்த்தக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூமிராஜ் (28... மேலும் பார்க்க

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை திறந்துவைத்தாா் அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாநகராட்சி சாா்பில் ரூ.4 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கிழக்கு மண்டலம் அலுவலகக் கட்டடத்தை மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மதுரை மாநகராட்சி மண்ட... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரை சோழவந்தான் அருகே மிதிவண்டி மீது ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (74). இவா் மதுரை சோழவந்தான் அருகே உள... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

மதுரையில் சரிவர பள்ளிக்குச் செல்லாததை பெற்றோா் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை வில்லாபுரம் தென்றல் நகா் சின்னக்கண்மாய்ப் பகுதியைச் ... மேலும் பார்க்க

விருதுநகரில் வரைமுறையின்றி சொத்து வரி உயா்வு: நகா்மன்ற கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு

விருதுநகரில், வரைமுறையின்றி சொத்துவரி உயா்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து நகா்மன்றக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். விருதுநகா் நகராட்சி அவசரக் கூட்டம் அதன் தலைவா் ஆா... மேலும் பார்க்க

பணம் இரட்டிப்பு மோசடி: 5 போ் கைது

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி, முதியவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (62). இவருக்க... மேலும் பார்க்க