செய்திகள் :

மதுரை: ``மதுவிலக்குத்துறை அமைச்சரை `சாராய அமைச்சர்' என்று சொன்னால் கோபம் வருகிறது'' - அண்ணாமலை

post image

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

கூட்டத்தில்

நேற்று மாலை மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை பேச்சு

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, "மழை வந்துவிடும் என்றேன், வராது, நீங்கள் 5 நிமிடமாவது பேச வேண்டும் என நயினார் நாகேந்திரன் என்னிடம் கூறினார்.

167 தொகுதிகளைத் தாண்டி எடப்பாடி பழனிசாமியின் யாத்திரை நடந்துள்ளது, 67 தொகுதி மீதியுள்ளது நயினார் நாகேந்திரன் 67 கட்சி மாவட்டங்கள் வாரியாக செல்கிறார். ஆட்சி மீது கோபத்தில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும்.

நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியில்

மீண்டும் ஆட்சியமைப்போம் என திமுகவினர் இறுமாப்பாக உள்ளனர். பணத்தை கொடுத்துவிடலாம், பெண்களுக்கு 1000 கொடுத்துள்ளதால் வாக்குகள் வரும் எனவும், எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என்றும் நினைக்கிறார்கள், கண்ணாடி கூண்டிலிருந்து திமுக கல்லை வீசி வருகின்றனர்.

நான்கரை ஆண்டுகளில் 88 பேர் கள்ளச்சாரயத்தில் இறந்துள்ளனர், இந்த அவமானம் தமிழகத்தில்தான்.

கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். என்ன பாவம் செய்தார்கள், அந்த கூட்டத்தில் 100 காவல்துறையினர் கூட பாதுகாப்பில் இல்லை, ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி மரணத்திற்கு உயர் அதிகாரிகள் தலைமயில் ஏராளமான போலீசாரை அனுப்பி பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.

நான்கரை ஆண்டுகளில் நடந்த மாற்றம்

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் மாறியுள்ளது என்கிறார்கள். ஆம் மாறியுள்ளது, வேட்டி கட்டிய முதலமைச்சர் தன்னை இளைமையாக காட்டிக்கொள்ள இப்போது பேண்ட் போடுகிறார்.

வெளிநாட்டில் புட்பால் விளையாண்ட பேரன் இன்பநிதி் நடிகராக வரவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தினசரி நாயோடு தான் போட்டோ போடுவார், அந்த நாய்க்கு மீசை கருப்பாக இருந்தது, இப்போது வெள்ளையாக மாறிவிட்டது, இதுதான் நான்கரை ஆண்டுகளில் நடந்த மாற்றம்.

நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என சொல்வதுதான் மாற்றமாம். ஆனால் மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது.

கருணாநிதி பெயரில் சாலை, சிலை, பாராட்டு விழா நடத்துவார்கள், இதைத் தவிர நான்கரை ஆண்டுகளில. எதுவும் நடக்கவில்லை.

அடுத்த முதலமைச்சராக 2026 ல் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என மோடி முடிவுசெய்து கூட்டணி அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில்

`டெல்லிக்கு போனாலே வம்பு சண்டை'

தியேட்டருக்கு செல்லுங்கள் படம் பாருங்கள் சினிமாவில் நடிப்பவர்கள் நன்றாக ஆளுவார்கள் என நினைத்தால் அது சரியல்ல, இந்த யாத்திரை நிச்சயம் வெற்றி பெறும்.

குழந்தைகள், பெண்கள் இந்த யாத்திரைக்கு வந்தால் பாதுகாப்பாக திரும்பி செல்வார்கள், டெல்லிக்கு போனாலே வம்பு சண்டை போடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற இருமல் மருந்து சாப்பிட்டு 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் உள்ள இரு மருத்துவ அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்கிறார்கள், நான்கரை ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் ஆய்வு செய்யவில்லை.

ரிவ்யூ மீட்டிங் நடத்த தெரியாதவராக பொம்மை முதலமைச்சராக உள்ளார். அவரின் குடும்ப வளர்ச்சிக்கு மட்டும் பாடுபடுகிறார். நமக்கு இது கடைசி் வாய்ப்பு, அரிய வாய்ப்பு. தவற விட்டுவிடாதீர்கள். கட்சி சார்பில்லாத மனிதரை இந்த யாத்திரைக்கு அழைத்து வர வேண்டும்" என்றார்.

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``காவல்துறையினர் ஏன் எங்களை வரவேற்றனர்?'' - ஆதவ் அர்ஜுனா கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.இதில் பாதிக்கப்பட்டவர்க... மேலும் பார்க்க

``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

சதானந்தன் மாஸ்டர்கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதானந்தன் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் சி.பி.எம் நிர்வாகியாக இருந்தார் சதானந்தன் மாஸ்டர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் நிர்வாகிகளால் தாக்குதலுக... மேலும் பார்க்க

`இந்து கடைகளில் பொருட்கள் வாங்குங்கள்’ - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு; விளக்கம் கேட்கும் அஜித் பவார்

மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு அளவில் தயாராகி வருகின்றனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந... மேலும் பார்க்க