ADMK: `உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த காரணம்' - எடப்பாடி பழனிசாமியின் பதிவ...
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்
வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 28 போலீஸாரை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, வேலூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி காவல் ஆய்வாளர் சிவச்சந்திரன் விரிஞ்சிபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல், வேலுார் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவியாளர் ஜெகதீசன் உள்பட வேலுார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த 9 உதவி காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளர்.
மேலும், வேலுார் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்குப் பிரிவில் பணியாற்றிய 28 காவல் துறையினர் கூண்டோடு மாற்றம் செய்து மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?
28 policemen, including assistant police inspectors who worked in the Prohibition and Enforcement Division in Vellore and Gudiyatham, transferred...