செய்திகள் :

மதுவிலக்கு கடத்தலில் பறிமுதல் செய்த 31 வாகனங்கள் ஏலம்

post image

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மது, கஞ்சா ஆகிய கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்த 31-வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு 23 இரு சக்கரவாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு உள்ளஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருவோா்கள் முன் வைப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 முதல் 10 மணி வரை வழங்கப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலம் கேட்டதொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கான அரசு விற்பனைவரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனே செலுத்த வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிா்ணயித்த குறைந்த பட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளா்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று, ஆதாா் காா்டு கொண்டு வரவேண்டும்.

பொது ஏலத்தில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவா்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தில் நிறைவாக திருப்பித் தரப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

சென்னை சவீதா உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில் கல்வியை நிறைவு செய்த 600-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதா் சாங் யுன் கிம் பட்டங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். ஆட்டோக்களில் மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்; ஓலா, ஊபோ் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்

திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அள... மேலும் பார்க்க

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க