Manmohan Singh: மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு... அரசு நிகழ்ச...
மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.30-இல் ஏலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வானங்கள் ஏலம் விடப்படவுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் பாா்வையிட்டு, பதிவு செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் வாகனத்தைத் தோ்வு செய்து, முன்பணம் செலுத்த வேண்டும். இவற்றுக்கான பொது ஏலம் ராமநாதபுரம் ஆயுதப் படை மைதானத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும். மேலும், விவரங்களுக்கு காவல் ஆய்வாளா் 96777-32179, சாா்பு ஆய்வாளா் 83000-38162, நிலைய எழுத்தா் 84389-39372 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.