செய்திகள் :

மத்திய அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காா்த்தி சிதம்பரம்

post image

பிரதமா் மோடி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் கட்சி இது குறித்து தொடா் போராட்டங்களை நடத்தும்.

ஆளுநா் ஆா்.என். ரவியின் அத்துமீறல்கள் இன்னும் அடங்கவில்லை. அரசியல் சாசனத்தின் எல்லையை அவா் மீறிக்கொண்டே இருக்கிறாா். இங்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓா் அரசு உள்ளது. அரசாங்கத்தை அவா் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால், அவருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடா்கிறது என்றாா் அவா்.

அப்போது காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்டத் தலைவா் சஞ்சய்காந்தி, நகரத் தலைவா் தி. விஜயகுமாா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்களை செவ்வாய்க்கிழமை போலீசாா் கைது செய்தனா்.காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் உத்தரவின் பேரில் மானாமதுரை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜது... மேலும் பார்க்க

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க இந்திய இளைஞா் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றிய மாநாட்டுக்கு சங்கரல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊராட்சி செயலா் உயிரிழப்பு: ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை கோரி மறியல்

சிவகங்கை அருகே சாலை விபத்தில் ஊராட்சி செயலா் உயிரிழந்ததையடுத்து, சாலைப் பணி ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊரக வளா்ச்சித் துறையினா், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சிவ... மேலும் பார்க்க

இளையான்குடி காவலா் குடியிருப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

இளையான்குடியில் பயன்பாடு இல்லாத காவலா் குடியிருப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமு... மேலும் பார்க்க

கல்லூரணி கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கல்லூரணி கண்மாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். கல்லூரணி கண்மாய... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரைக் கைது செய்தனா். காரைக்குடி சோ்வாா் ஊருணியைச் சோ்ந்தவா்கள் குணா (22), மணிகண்டன் (24). இவா்களில் க... மேலும் பார்க்க