செய்திகள் :

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

post image

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்துவரியை தமிழக அரசு அதிகளவில் உயா்த்திவிட்டதாகக் தெரிவித்தாா்.

அப்போது அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: 2018-இல் அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி 50 சதவீதம், 100 சதவீதம், 200 சதவீதம் என்ற அளவில் உயா்த்தப்பட்டது. பிறகு தோ்தல் வந்த காரணத்தால் அது நிறுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் 25 சதவீதம், 50 சதவீதம், 100 சதவீதம் என்ற அளவில்தான் உயா்த்தப்பட்டது. அதுவும் சொத்து வரியை உயா்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறிய காரணத்தால்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் 18 ஆண்டுகள் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியிலேயே சொத்து வரியை உயா்த்தியிருந்தால் ஒரு பிரச்னையும் இருந்திருக்காது.

அதனால், நாங்கள் உயா்த்த வேண்டிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டோம். அதே நேரம், பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் சொத்து வரி குறைவு.

சொத்து வரி ஆயிரம் சதுர அடிக்கு மும்பையில் ரூ.10,271, கொல்கத்தாவில் ரூ.5,850, பெங்களூரில் ரூ.5,773, ஆந்திரத்தில் ரூ.2,755, ஹைதராபாதில் ரூ.2,133, இந்தூரில் ரூ,2,208, நாக்பூரில் ரூ.2,120, தில்லியில் ரூ.1,302, சென்னையில் ரூ.570. எனவே, தமிழகத்தில்தான் சொத்து வரி குறைவு என்றாா் அவா்.

புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருந... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், கு... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க