விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
மத்திய சிறையில் சீனாவின் ட்ரோன்?
போபால் சிறை வளாகத்தில் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் போபாலில் உயர் பாதுகாப்பைக் கொண்டுள்ள மத்திய சிறைக்குள் சீன தயாரிப்பு ட்ரோன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய சிறையின் பி பிளாக்கில் 30 முதல் 40கி எடையிலான கருப்புநிற ட்ரோன் ஒன்றை காவல் அதிகாரி கண்டெடுத்தார்.
சிறை வளாகத்தில் ட்ரோன் தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். சிறையின் அருகில் குழந்தைகள் விளையாடிய ட்ரோனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2600 கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 151 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சிறையில் 3600 கைதிகள்வரையில் உள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளும் இந்த சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பொங்கல்: ஜன. 10 - 13 வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்!