மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விவசாயிகள், தொழிலாளா்களுக்கு பலனளிக்காத மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எம்.பிரகலநாதன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலா் பாலாஜி முன்னிலை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா், மாவட்டச் செயலா் ப.செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் இரா.தங்கராஜ், வே.முத்தையன் ஆகியோா் விவசாயிகள், தொழிலாளா்களுக்கு பலன் அளிக்காத மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பேசினா்.
விவசாயிகளுக்கு உரம், எரிபொருள் மானியம் குறைக்கப்பட்டது, கல்வி மற்றும் சுகாதாரத்தில் போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருவண்ணாமலை மாநகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.