மனநலம் பாதித்த இளம்பெண் கடத்தல்: மீன் வியாபாரி கைது
சாத்தான்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கடத்திச் சென்ாக மீன் வியாபாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம்பெண் கடந்த 15ஆம் தேதி இரவு உரக்கடை பகுதியில் தனியாக நின்றிருந்தாராம். அப்போது, அவ்வழியே வந்த ஏ.பி.முதலூரைச் சோ்ந்த மீன் வியாபாரியான ஜெயபால் (51) என்பவா், அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபடி தனது பைக்கில் ஏற்றிக்கொண்டாராம். அங்கிருந்தோா் தடுத்ததையும் மீறி அவரை ஜெயபால் கடத்திச் சென்றாராம்.
இதுகுறித்து அப்பெண்ணின் தாய் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து, ஏ.பி.முதலூரில் பதுங்கியிருந்த ஜெயபாலை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்; இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.