குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தன்னுடைய மனைவியைக் கொன்ற, உடலை வெட்டித் துண்டுகளாக்கி, வீட்டில் இருந்த குக்கரில் அவற்றை வேகவைத்து, எலும்புகளை கிரைண்டரில் அரைத்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனவரி 15ஆம் தேதி இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் ஜனவரி 18ஆம் தேதி முதல் புட்டவெங்கட மாதவியை (35) காணவில்லை என்று அவரது அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இதில் கொலையாளி குருமூர்த்தி மீதுதான் அனைவருக்கும் சந்தேகம் வந்துளள்து.
இதையடுத்து மாதவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தங்களுக்குள் சண்டை ஏற்பட்டு, அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக குருமூர்த்தி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, காவல்துறையினர் குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தியதில், மாதவியை தான் கொலை செய்து உடலை ஏரியில் வீசியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.