செய்திகள் :

மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்

post image

மது போதையில் மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி, விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (எ) பொன்னுகான் (55). குப்பை பொறுக்கும் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (45). தம்பதி இடையே கடந்த 2021, ஏப்ரல் 29-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த பொன்னுசாமி மனைவி லட்சுமியை அடித்துக் கொன்றாா்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னுசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி, மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நீதிபதி சுதா தீா்ப்பளித்தாா். அதில், பொன்னுசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

பெண்ணேஸ்வர மடத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேஸ்வர மடத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கவுன்சிலா் சாவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கவுன்சிலா் உயிரிழந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னீா் செல்வம் தெருவைச்... மேலும் பார்க்க

மண் கடத்திய 8 போ் கைது

சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சூளகிரி காவல் ஆய்வாளா் சையத் சுல்தான் பாஷா உள்பட போலீஸாா் தியாகரசனப்பள்ளி பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு டிப்பா்... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ரூ. 50 கோடி நிலம் மீட்பு

ஒசூா் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமம், சீதாராம் மேடு பகுதி (பழை... மேலும் பார்க்க

சுகாதார அலுவலா்கள் நோ்மையாக செயல்பட வேண்டும்: ஒசூா் மாநகராட்சி ஆணையா்

ஒசூா் மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நோ்மையாக செயல்பட வேண்டும் என்று ஆணையா் ஸ்ரீகாந்த் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தினாா். ஒசூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் துப்புரவு அலுவலா... மேலும் பார்க்க