செய்திகள் :

மம்மூட்டியின் புதிய பட அறிவிப்பு!

post image

நடிகர் மம்மூட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

இதனைத் தொடர்ந்து மம்மூட்டி, கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘பசூகா’ வருகிற ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

களம்காவல்

இந்தப் படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டியுடன் இணைந்து விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியாகும் கூறப்படும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹிந்தியில் படுதோல்வியடைந்த லவ் டுடே ரீமேக்!

லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலில் இருந்துகொண்டே உறவை மதிக்காத காதலர்களின் பிரச்னையை ந... மேலும் பார்க்க

மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மணிமேகலை தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் தெரியவந்துள்ளது.சன் மியூசிக் இசை சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்க... மேலும் பார்க்க

ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் புதிய போஸ்டர்!

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்ச... மேலும் பார்க்க

விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!

விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லியில் சிம்ரன்!

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு... மேலும் பார்க்க

சுழல் - 2 டிரைலர்!

சுழல் - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடரான சுழல் கடந்த 2022 ஜூன் 17-ஆம் த... மேலும் பார்க்க