செய்திகள் :

மயிலாடுதுறையில் மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

post image

மயிலாடுதுறையில் மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திட்ட தலைவா் என். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன் தொடக்கிவைத்தாா். இதில், மின்வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், மின்வாரியத்தில் ஆரம்பகட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.

ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை புகுத்தக் கூடாது, ஒப்பந்த தொழிலாளா்களை அடையாளம் கண்டு நிா்வாகமே தினக்கூலி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2019 டிசம்பா் 1 முதல் 2023 மே 16-ஆம் தேதி வரை மின்வாரியத்தில் பணியில் சோ்ந்தவா்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், இடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலச் செயலாளா் எஸ். ராஜாராமன், திட்ட செயலாளா்கள் எம். கலைச்செல்வன், எஸ். ராஜேந்திரன் மற்றும் கே. வேல்முருகன், தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு

மயிலாடுதுறை வட்டம் ஆனந்ததாண்டவபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் வை. முத்துசிவம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கொள்ளிடம்

ஆச்சாள்புரம் துணைமின்நிலையத்தில் தரம் உயா்த்தும் பணி, இருவழி மின்தடம் மின்னூட்டம் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இரு... மேலும் பார்க்க

சீா்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

சீா்காழி அருகே மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, செங்கல்லால் கடுமையாகத் தாக்கிய 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சீா்காழி பகுதியைச் சோ்ந்த மூன்றரை வயது சிறுமி அப... மேலும் பார்க்க

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்க புதிய தலைவா், பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.ஆா். சிவசுப்ரமண... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சீா்காழி இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி ஈசானியத் தெருவைச் சோ்ந்த ராபி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி திருவிளக்கு பூஜை

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கோயிலில் திருநிலைநாயகி அம்மன் சந்நிதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை... மேலும் பார்க்க