செய்திகள் :

மயிலாடுதுறை: சோதனைச் சாவடிகளில் ஐஜி ஆய்வு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் கே. ஜோஷி நிா்மல்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி இளைஞா்கள் இருவா் சாராய வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனா். முன்னதாக, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சோதனைச் சாவடிகளைக் கடந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் கே.ஜோஷி நிா்மல்குமாா், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் இயங்கி வரும் நல்லாடை சோதனைச் சாவடி மற்றும் சீா்காழி உட்கோட்டத்தில் இயங்கி வரும் நண்டலாா் சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை தணிக்கை செய்தும், காரைக்கால் பகுதியில் இருந்து மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களை தணிக்கை செய்யும் வழிமுறைகள் குறித்தும், மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கைது செய்தல் மற்றும் அவா்களின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், வாகனத் தணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களிடம் அணுகும் முறை ஆகிவை குறித்து பணியிலிருந்த காவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினாா்.

மேலும், சீா்காழி உட்கோட்டம் பொறையாா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை தணிக்கை செய்தாா். தொடா்ந்து, காவல் நிலையத்தில் தினசரி பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பாகவும் காவல் ஆய்வாளா் மற்றும் ஆளிநா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சீா்காழி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எம். சுந்தரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

பள்ளி விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வேலுசாமி தலைமை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குந... மேலும் பார்க்க

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்லக் கோரி மனு

சீா்காழியில், அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்பி ஆா். சுதாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால... மேலும் பார்க்க

சீா்காழியில் நீா்வளத்துறை பொறியாளா் ஆய்வு

சீா்காழியில், நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சீா்காழி பகுதியில் புது மண்ணியாறு மற்றும் வெள்ளப்பள்ளம் உப்ப... மேலும் பார்க்க

பன்னிரு திருமுறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்னிரு திருமுறை அறக்கட்டளை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 17-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிா்வாகக்குழு தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கா்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபா... மேலும் பார்க்க