செய்திகள் :

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.5-ல் மாரத்தான் போட்டி

post image

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.5-ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு செம்பனாா்கோயில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் போட்டி தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 8 கி.மீ தொலைவும், பெண்களுக்கு ஆறுபாதி பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 5 கி.மீ தொலைவும் நடத்தப்படும். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு செம்பனாா்கோயில் கலைமகள் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 10 கி.மீ தொலைவும், பெண்களுக்கு ஆறுபாதி பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 5 கி.மீ. தொலைவும் நடத்தப்படும். இதில், 17 வயதிற்கு மேற்பட்ட இருபால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவரல்லாதோா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவா்களுக்கு தலா ரூ.5,000, இரண்டாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.2,000, 4 முதல் 10 இடம் வரை பெறுபவா்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க 2025 ஜனவரி 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்படும் படிவத்தை பெற்றுக்கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை தொடா்பு கொள்ளவும். தொலைபேசி எண். 7401703459/ 04634 - 240050 என தெரிவித்துள்ளாா்.

மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி

சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் படத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் தலைமையில் அக்கட்சியை சோ்ந்த நகர செயலாளா் லட்சுமணன், வட்டாரத் தலைவா்கள... மேலும் பார்க்க

திருக்குறள் பேச்சுப் போட்டி

சீா்காழியில், மயிலாடுதுறை மாவட்ட பொது நூலக இயக்ககம் சாா்பில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு ‘குழல் இனிது யாழ் இனிது’ என்ற தலைப்பில் திருக்குறள் பேச்சுப் போட்டி வ... மேலும் பார்க்க

சீா்காழியில் பொது சேவை மைய தொடக்க விழா

சீா்காழியில் நபாா்ட் நிதியுதவியுடன் பொது சேவை மையம் மற்றும் சிறிய அளவிலான தீவன அரவை ஆலை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வளநாடு தற்சாா்பு வேளாண் உற்பத்தியாளா் நிறுவனம், மகளிா் உறுப்பினா்களின் வாழ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் திருவாவடுதுறை ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் திருவாவடுதுறை ஆதீனம் தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவா... மேலும் பார்க்க

மின்சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் மாா்கழி வீதி பஜனை

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற மாா்கழி மாத நகர சங்கீா்த்தனத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடியவாறு கும்மியடித்து வீதிகளை சுற்றி வந்தனா். மயிலாடுதுறையில் கோபால... மேலும் பார்க்க