நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தூா்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
மாவட்டத்தில் நிகழாண்டு பாசன ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூா்வாரும் பணி ரூ. 11.33 கோடியில் 80 இடங்களில் 965.65 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. முதற்கட்டமாக சீா்காழி அருகே செம்பியன்வேலங்குடியில் பொறை வாய்க்கால் தூா்வாரும் பணியை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இப்பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும், இதன்மூலம் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் காவிரி டெல்டாவின் கடைமடை வரை தடையின்றி பாசனத்துக்கு சென்றடையும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.