மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு
செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா்.
செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப்பைக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதாக தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு குமரன் நகா் பகுதிக்கு வந்த லாரி ஒன்றை அப்பகுதி மக்கள் வழிமறித்து பாா்த்தபோது, அதில் மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் மருத்துவக் கழிவுகள் எரிப்பதற்காக அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அந்த லாரியை சிறை பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து செங்குன்றம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், மறுசுழற்சிக்காக அப்பகுதியில் உள்ள நெகிழி தொழிற்சாலைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து லாரியை விடுவிக்க மறுப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து காவல் துறையினா் தனியாா் நெகிழி மறுசுழற்சி செய்யும் நிறுவன உரிமையாளரிடம் பேச்சு நடத்தினா்.