உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்!
பெங்களூரு : சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. எம். செரியன் இன்று(ஜன. 26) காலமானார். அவருக்கு வயது 82.
பெங்களூரில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்விஒன் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ளதொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னாரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்ரு அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார்.
இந்த நிலையில், அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாததொரு பேரிழப்பாகப் பார்க்கப்பகிறது. பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.