Viduthalai 2: "மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறன்..." - தனுஷ் சொல்லியதென்ன?
மருத்துவ ஆலையில் வாயு கசிவு: 2 பேர் கவலைக்கிடம்!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
பாராவாட மண்டல் பகுதியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டியிலுள்ள ஒரு தனியார் மருத்துவ ஆலையில் இன்று (டிச.23) காலை ஏற்பட்ட வாயு கசிவினால் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.
உடனடியா காயமடைந்த நால்வரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விஜயவாடாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: மதுபோதையில் லாரி ஓட்டியதில் விபரீதம்! 3 பேர் பலி!
இதில், 2 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய் கிருஷ்ணன் பேசும்போது, காயமடைந்த நால்வரும் தனியார் ஆலையில் மருத்து உற்பத்தியின்போது கசிந்த ஹைட்ரோஜன் சல்ஃபைட் எனும் வாயுவை சுவாசித்ததாகவும், இதனால் மயக்கமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் விபத்தா? அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் சதி செயல் உள்ளதா? என அம்மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.