செய்திகள் :

மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!

post image

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, ரூ. 12 கோடி மதிப்பில் நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடைய 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தின் மருந்துகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு திறன் அறிய நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரியல் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை நிறுவப்பட்டது.

தமிழ்நாடு அரசு மருந்துகள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடமிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடை சோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. 

மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய இரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது.

மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன் படி அட்டவணை C மற்றும் C1 உட்பட ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து மாதிரிகளை மருந்தியல் தனிவரைவின் படி முழுமையான ஆய்வு புரிந்து தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மருந்தியல் அரசு பகுப்பாய்வாளரால் முடிவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு நவீன ஆய்வகத்தினால் இந்திய மற்றும் யுஸ் பார்மகோப்பியா படி மருந்துகளின் விரிவான ஆய்வின் மூலம் அவற்றின் அத்தியாவசியமான தரங்கள் பராமரிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிக்க: மதுரா மசூதியில் கள ஆய்வுக்கான தடை தொடரும்! - உச்சநீதிமன்றம்

  1.  அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கருவுற்றவர்கள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும்.

  2. இந்த நவீன கட்டமைப்புடன் தர மேலாண்மை மிக்க ஆய்வகத்திடமிருந்து நம்பகதன்மையுடன் உள்ள ஆய்வறிக்கை பெறப்படும்.

  3. இது மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய தீவிர எதிர்மறை விளைவுகள், ரத்த பரிமாற்று எதிர்வினைகள், தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும், இதனால் நோயின் காரணமாக உருவாகும் வியாதி, மரணத்தை மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலத்தை குறைத்து, நோயினால் உண்டாகும் பொருளாதார சுமையைக் குறைக்கும்.

இந்த முயற்சி தமிழ்நாடு அரசின் மாநிலம் முழுவதும் உயர் தரமான மருத்துவ வசதி மற்றும் மருந்து பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டை மேற்கோள்காட்டுகிறது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் சீனர் கொலை! தலிபான் அரசு அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தஷ்கர் மாகாணத்தில் பயணம் செய்தபோது ‘லீ’ எனும் பின்பெயரைக் க... மேலும் பார்க்க

செய்வினை சந்தேகத்தில் கொலைவெறி தாக்குதல்! 70 வயது மூதாட்டி பலி!

ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் செய்வினை வைத்ததாக சந்தேகித்து அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலியானார்.ராயகாடாவின் மண்கடஜோலா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம்: நாளை(ஜன. 23) மகிழ்ச்சியான தகவல் வரும்! - அண்ணாமலை

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை(வியாழக்கிழமை) மகிழ்ச்சியான தகவல் வரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்ட... மேலும் பார்க்க

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருடன் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்திப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் இன்று (ஜன.22) காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சூட்டில் பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.போகாரோ மாவட்டத்தின் பன்ஷி ஜர்வா வனப்பகு... மேலும் பார்க்க