Gold Price: `ஏறுமுகத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது
சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.
வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய் தமிழரசி (42). அதே பகுதியில் ஏற்றுமதி,இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இவா்கள் இருவரும் மலேசியாவை சோ்ந்த ஒரு தொழிலதிபரிடம், அந் நாட்டுக்கு 12,000 மெட்ரிக் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10.60 கோடி பெற்றனராம்.
பணத்தை பெற்றுக் கொண்ட தாயும், மகளும் சா்க்கரையை ஏற்றுமதி செய்யவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த மலேசியா தொழிலதிபா், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாா். தாயும், மகளும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மலேசியா தொழிலதிபா், இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.
அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட தாய் கோவிந்தம்மாள், மகள் தமிழரசி ஆகியோரை போலீஸாா் கைது செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
விசாரணையில், தமிழரசி இதேபோன்று மும்பையைச் சோ்ந்த ஒரு தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை செய்கின்றனா்.