செய்திகள் :

மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

post image

மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10 மணியளவில் அந்நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸிற்கு சொந்தமான எரியாவு குழாயில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட தீப்பிழம்பானது சுமார் 20 அடுக்குமாடி கட்டடம் உயரத்திற்கு எரிந்துள்ளது. இதுகுறித்து வெளியான விடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், மலேசியாவின் பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட குழாயை முடக்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மதியம் 2.45 மணியளவில் அந்தத் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அந்நாட்டில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த விபத்தினால் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகள் பெரும்பாலும் சேதமடைந்ததுடன், 49 வீடுகள் தீயிக்கு இரையாகியுள்ளன.

இத்துடன், இந்த விபத்தில் சுமார் 112 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதில் 63 பேர் தீக்காயம் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செலன்கார் மாநில முதல்வர் அமிருதீன் ஷாரி கூறுகையில், பாதுகாப்பு கருதி அப்பகுதி வாசிகள் அனைவரும் தீயணைப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டு அங்குள்ள மசூதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பெட்ரோனாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விபத்தில் பாதிக்கப்படாத 3 எரிவாயு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் தென்மேற்கு பகுதிகளின் மீது நேற்று (ஏப்.2) இரவு இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டத... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் க... மேலும் பார்க்க

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் ... மேலும் பார்க்க

இலங்கை: பிரதமர் மோடியின் வருகையால் தெரு நாய்களைப் பிடிக்கும் அரசு! மக்கள் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கையிலுள்ள தெரு நாய்களைப் பிடிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்களும் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தியப் பிரதமர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நக... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

நாட்டில் உள்ள வங்கிகள் 2025 ஏப்ரல் மாதத்தில் 16 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் பல்வேறு பண்டிகைகள், உள்ளூர் விழா விடுமுறை மற்றும் பொது விடுமுறை, இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் கட்டாய வாராந்த... மேலும் பார்க்க