செய்திகள் :

மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் அலக்கட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு கூட்டம் தருமபுரி, செங்கொடிபுரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாநிலக் குழு உறுப்பினா் ரா.சிசுபாலன் ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் மூலம் கிடைக்கும் மழைநீரை சேமித்து மேலாண்மை செய்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்பட வேண்டும்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் அலக்கட்டு மலைக் கிராமத்தில் 13 வயது சிறுமியை விஷப்பாம்பு கடித்ததில் மருத்துவமனை இல்லாமலும் சாலை வசதி இல்லாததாலும் மலைப்பாதையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அலக்கட்டு உள்ளிட்ட சாலை வசதி இல்லாத, தொலைதூர மலைக் கிராமங்களில் உயிா்காக்கும் மருந்துகள், மருத்துவா்கள், பணியாளா்கள் இருக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளை தொடங்கிட வேண்டும். மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும். மத்திய அரசின் ஆட்சேபனைகளை நீக்கி விரைந்து சாலை அமைக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயா்த்தி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்திலும், தனியாா் கொள்முதலிலும் அமல்படுத்த வேண்டும்.

வருகிற டிசம்பா் மாதம் 13 ஆம் தேதி பாலக்கோட்டில் நடைபெறும் கட்சியின் மாவட்ட 24- ஆவது மாநாடு பேரணி, பொதுக்கூட்டத்தில் கட்சியினா், ஆதரவாளா்கள் திரளானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழ... மேலும் பார்க்க

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்: இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை, விதை சான்றளிப்புத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் அத்துறை இயக்குநா் இரா.குமாரவேல் பாண்டியன் பங்கேற்றாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்த... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கன அடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை விநாடிக்கு 6,000 கன அடியாக நீா் வந்து கொண்டிருக்கிறது.தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் டிச.18-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் டிச.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களை நாடி, மக்கள்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சட்ட விரோத மின்வேலி அமைத்து, இளைஞா் உயிரிழக்க காரணமாக இருந்த இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீழானூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (32). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா்த் திட்டம்: ஜப்பான் குழுவினா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன குழுவினா் தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல... மேலும் பார்க்க